சமீபத்திய முன்னணி நாயகியாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர் (priya bhavani shankar). இவர் தற்போது நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ் நாயகனாக நடித்துள்ள இதில் மூன்று நாயகிகளில் ஒருவராக ரஞ்சனி என்ற பெயரில் நடித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
26
Actress Priya BhavaniShankar
தாவணியுடன் கிராமத்து பெண்ணாக வரும் இவரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். முன்னதாக யானை படத்தில் பிரியா பவானி சங்கர் (priya bhavani shankar) தைரியமான பெண்ணாக நடித்து அந்த படத்திலும் நல்ல பெயரை பெற்றுக்கொண்டார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் பிரியா பவானி சங்கர் priya bhavani shankar). விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் இவரது புகழ் பரவி இருந்தது.
46
priya bhavani shankar
இதை தொடர்ந்து மேயாத மான் படம் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்த இவர். இதை அடுத்து இந்த படம் இவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான விருதை பெற்றுக் கொடுத்தது.
பின்னர் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், மாஃபியா அத்தியாயம் உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார் பிரியா பவானி. அதோடு களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் தோன்றியவர் தற்போது இந்தியன் 2, பத்து தலை உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
66
Priya Bhavani Shankar
நாயகி அந்தஸ்தை பெற்றுவிட்ட ப்ரியா பவானி மீண்டும் எஸ்ஏ சூர்யாவுடன் பொம்மை, அசோக் செல்வனுடன் ஜோடியாக ஹாஸ்டல், ஜெயம் ரவி உடன் அகிலன் உள்ளிட்ட படங்களில் பிசியாக இருக்கிறார்.
இதற்கிடையே விடுமுறையில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர் மற்ற முன்னணி நாயகிகளை போலவே வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு குட்டை பாவாடை, டைட் ஜீன்ஸ் என வழக்கத்தை விட மாறாக ஓவர் கிளாமரில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.