தமிழ் சினிமாவில் 1980, 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே இயக்குனர் சுந்தர் சி மீது காதல் வயப்பட்ட குஷ்பு, அவரை திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக நடிகை ஒருவருக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவுக்கு தான். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பாப்புலராக இருந்தார் குஷ்பு. அதேபோல் தமிழ்நாட்டில் இன்றளவும் குஷ்பு இட்லி பேமஸாக உள்ளது.
திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட குஷ்பு, அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். அவர் முதன்முதலில் கலைஞர் முன்னிலையில் கடந்த 2010-ம் ஆண்டு திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
திருமணத்துக்கு பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட குஷ்பு கடந்த ஆண்டு திடீரென உடல் எடையை குறைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். தீவிர உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்த அவர் படு ஸ்லிம்மாக மாறிவிட்டார்.
உடல் எடையை குறைத்த பின்னர் விதவிதமாக போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார் குஷ்பு. அந்த வகையில், தற்போது ஜொலிக்கும் கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.