மணிவண்ணனிடம் துணை இயக்குனராக சினிமா உலகம் பற்றி கற்றுக் கொண்ட சுந்தர் சி அவர் பாணியிலியே நகைச்சுவை கலந்த படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். முறை மாமன், அருணாச்சலம், அன்பே சிவம், மேட்டுக்குடி, முறை மாப்பிள்ளை, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர்கள் காமெடி சென்ஸ் காரணமாகவே இந்த படங்கள் ஓடின. அதிலும் உலகநாயகன், ரஜினி ஆகியோரை நகைச்சுவை நாயகர்களாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
மேலும் செய்திகள்... கிளாமர் உடையில் மும்பையை கலக்கிய தமன்னா...இவ்வளவு விலையா?