
திரையுலகில் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே அதிக படியான ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, திரையுலகில் அதிகம் விவாதங்களுக்கு ஆளான 7 முக்கிய சர்ச்சைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
டிசம்பர் 5-ஆம் தேதி வெளியான 'புஷ்பா 2' படத்தின் ப்ரீமியர் காட்சி ஒரு நாளுக்கு முன்னதாகவே ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் போடப்பட்ட நிலையில், இதை அல்லு அர்ஜுன் பார்க்க சென்றார். அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், சரியான பாதுகாப்பு பணிகள் இல்லாத காரணத்தால், கூட்ட நெரிசலில் சிக்கி அல்லு அர்ஜுன் ரசிகை ரேவதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2025 புத்தாண்டை நடிகரின் குடும்பத்தோடு கொண்டாட வெளிநாடு பறந்த நயன் - விக்கி! வைரலாகும் புகைப்படம்!
பூனம் பாண்டே தனது மரணச் செய்தியைப் வெளியிட்டு பரபரப்பை வெளிப்படுத்தினார். பின்னர் அது விழிப்புணர்வுக்கான செயல் என்று கூறி அதிர வைத்தார். ரசிகர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளோடு பூனம் பாண்டே விளையாடுவதாக கூறி இவருக்கு எதிராக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து, ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இதில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் மோகன்லால் உட்பட AMMA உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்தது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
2024-ல் முடிவுக்கு வந்த 28 சின்னத்திரை தொடர்கள்! முழு விவரம் இதோ!
நெட்ஃபிளிக்ஸ் தொடரான IC 814: தி கந்தஹார் ஹைஜாக், 1999 கடத்தலில் பயங்கரவாதிகளின் மத அடையாளங்களைக் குறைத்து மதிப்பிட்டதாகக் கூறப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தனது நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படத்தில், 2015 ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரௌடி' படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி நடிகர் தனுஷ் நயன்தாராவிடம் 10 கோடி இழப்பீடு கேட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்க்கு நயன்தாரா தனுஷை விமர்சித்து 3 பக்க அறிக்கை வெளியிட்டார். தனுஷ் தரப்பில் இருந்து, நயன்தாரா கூறியதில் உண்மை இல்லை என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறினார்.
சுவாசிகா முதல் திவ்யா துரைசாமி வரை! 2024-ல் ரசிகர்களை இம்பிரஸ் பண்ணிய 6 பிரபலங்கள்!
கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகர் ரேணுகா சுவாமியைக் கொன்றதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட தர்ஷன், பவித்ரா கௌடா உட்பட ஏழு பேருக்கு, சமீபத்தில் தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் அட்லீயின் நிறம் குறித்து இனவெறி கருத்துகளைத் தெரிவித்ததற்காக, தொகுப்பாளர் கபில் சர்மா விமர்சனங்களை எதிர்கொண்டார். பின்னர் மன்னிப்பு கேட்டார்.
'பேபி ஜான்' படத்தில் கீர்த்திக்கு சிபாரிசு செய்தது இந்த டாப் ஹீரோயினா? அவரே பகிர்ந்த சீக்ரெட்!