2024-ல் முடிவுக்கு வந்த 28 சின்னத்திரை தொடர்கள்! முழு விவரம் இதோ!

Published : Dec 31, 2024, 04:23 PM IST

2024-ஆம் ஆண்டு சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த, சுமார் 28 சீரியல்கள் நிறைவடைந்துள்ளது. அது பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ.  

PREV
16
2024-ல் முடிவுக்கு வந்த 28 சின்னத்திரை தொடர்கள்! முழு விவரம் இதோ!
Rewind 2024

சமீப காலமாகவே, திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பு சீரியல்களுக்கும் கிடைத்து வருகிறது. அந்த வகையில். காரணம் திரைப்படங்களை விட சுவாரஸ்யமான கதைக்களத்திலும், ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸுடன் தொலைக்காட்சி தொடர்கள் உள்ளது. சரி இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 28 சீரியல்கள் முடிவடைந்துள்ள நிலையில் அவை எந்தெந்த சீரியல்கள் என்பதை பார்ப்போம்.
 

26
10 Sun TV Serials ending 2024

சன் டிவியில், மட்டும் அதிக பச்சமாக மொத்தம் 10 சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, புதிய சீரியல்களை இறக்கி உள்ளனர். 2024-ல் 3 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த தொடர்கள் கூட நிறைவடைந்தது.  அந்த வகையில் இந்த ஆண்டு பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியல் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து மதிய நேர தொடரான பிரியமான தோழி, அருவி, மீனா, பூவா தலையா ஆகிய தொடர்கள் அடுத்தடுத்து முடிவடைந்தது. அதே போல் 1000 எபிசோடுகளை எட்டும் என எதிர்பார்த்த 'எதிர்நீச்சல்' தொடர் இந்த ஆண்டு முடிவுக்கு வந்ததோடு, அதன் இரண்டாம் பாகம் இப்போது வேகமெடுக்க துவங்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த 'வானத்தைப்போல' சீரியலுக்கு இந்த ஆண்டு எண்டு கார்டு போட்ட சன் டிவி... இதை தொடர்ந்து  இனியா, மிஸ்டர் மனைவி, ஆகிய தொடர்களையும் முடிவுக்கு கொண்டு வந்தது.

சுவாசிகா முதல் திவ்யா துரைசாமி வரை! 2024-ல் ரசிகர்களை இம்பிரஸ் பண்ணிய 6 பிரபலங்கள்!
 

36
Vijay TV Serials

சன் டிவிக்கு அடுத்தபடியாக, விஜய் டிவி-யும் ரசிகர்களின் 5 பேவரட் சீரியலை அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி  எஸ் ஏ சி நடித்து வந்த கிழக்கு வாசல் தொடர்ந்து யாரும் எதிர்பாராத நேரத்தில் முடிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும், மோதலும் காதலும், செல்லம்மா, முத்தழகு, ஆகிய சீரியல்கள் முடிவடைந்தன.

46
Zee Tamil serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2024-ல் மட்டும், மொத்தம் 8 சீரியல்கள் முடிவடைந்துள்ளது. TRP ரேட்டிங் குறைவாக இருந்ததே இத்தனை சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர காரணம் என கூறப்படுகிறது. அதன்படி  நல தமயந்தி, வித்யா நம்பர் ஒன், அமுதாவும் அன்னலட்சுமி, மீனாட்சி பொண்ணுங்க, கனா, இந்திரா, சண்டக்கோழி ,சீதாராமன், ஆகிய சீரியல்கள் முடிவடைந்தன.

'பேபி ஜான்' படத்தில் கீர்த்திக்கு சிபாரிசு செய்தது இந்த டாப் ஹீரோயினா? அவரே பகிர்ந்த சீக்ரெட்!

56
Kalaigar TV Serial

அதே போல் கலைஞர் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த ரஞ்சிதமே, கண்ணெதிரே தோன்றினாள்,  பொன்னி C / O ராணி ஆகிய சீரியல்கள் இந்தாண்டு முடிவுக்கு வந்தது. இறுதியாக பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'பச்சை புடவை காரி' என்கிற தொடரும், டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'சந்தியா' என்கிற மெகா தொடரும் நிறைவடைந்தது.

66
28 Serials Ended in 2024

மொத்தத்தில் சன் டிவியில் 10 சீரியலும், விஜய் டிவியில் 5, ஜீ தமிழில் 8, கலைஞர் டிவியில் மூன்று, டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒன்று, மற்றும் பாலிமர் டிவியில் ஒன்று, என மொத்தம் 28 சீரியல்கள் இந்த ஆண்டு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Read more Photos on
click me!

Recommended Stories