இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பற்றி பேசி கவனம் ஈர்த்த அவர், அடுத்தடுத்து கர்ணன், மாமன்னன் என வரிசையாக வலி நிறைந்த படைப்புகளாக கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
24
Mari Selvaraj
தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வாழை படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். இப்படத்தின் கிளைமாக்ஸ் காண்போர் கண்கலங்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. வாழை படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். கபடி வீரரின் வாழ்க்கையை பற்றிய படமாக பைசன் உருவாகி வருகிறது.
பைசன் படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இப்படம் 2025-ம் ஆண்டு திரைக்கு வர உள்ளது. இது முடித்த கையோடு தனுஷ் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்க உள்ளார் மாரி செல்வராஜ். இதுதவிர சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடனும் அவர் கூட்டணி வைக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இப்படி பிசியான இயக்குனராக வலம் வரும் மாரி, தான் காதல் படம் ஒன்றை இயக்க ஆசைப்படுவதாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
44
Mari Selvaraj Movie Update
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னிடம் காமெடி படம் பண்ண கதைகள் எதுவும் இல்லை. ஆனால் என்னுடைய மனைவி திவ்யா, என்னிடம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு காதல் படம் பண்ண சொல்லி கேட்ருக்காங்க. எந்த ஒரு சமூக அர்ப்பணிப்பும் இன்றி, முழுக்க முழுக்க காதல் சார்ந்த படமாக அது இருக்க வேண்டும் என என் மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன். கண்டிப்பா அந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பேன்” என்று மாரி செல்வராஜ் கூறி இருக்கிறார்.