நடிகர்கள் அஜித்தும் விஜய்யும் தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகர்களாக வலம் வருகிறார்கள். இதில் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் தயாராகி வருகிறது. அதேபோல் விஜய் நடிப்பில் தளபதி 69 திரைப்படம் தயாராகி வருகின்றன. நடிகர் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. மறுபக்கம் அஜித் உடல் எடையை குறைத்து நடித்துள்ளதால் விடாமுயற்சி படத்துக்கு மிகப்பெரிய அளவில் ஹைப் உள்ளது.
24
Thalapathy Vijay, Ajithkumar
விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனியும், தளபதி 69 படத்தை எச்.வினோத்தும் இயக்கி உள்ளனர். இதில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். தளபதி 69-ல் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். இதில் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் என்பதால் அப்படத்திற்கான இசையமைக்கும் பணிகளில் பிசியாக உள்ளார் அனி.
இந்த நிலையில், புத்தாண்டன்று விஜய்யின் தளபதி 69 மற்றும் அஜித்தின் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களின் அப்டேட்டும் அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தன்று சர்ப்ரைஸாக வெளியிடப்பட வாய்ப்புள்ளதாம். இதனால் அப்படத்தின் டிரைலரை காண அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதேபோல் விஜய்யின் தளபதி 69 படக்குழுவும் புத்தாண்டன்று மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாம்.
44
Thalapahy 69 Update
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 69 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டன்று ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தளபதி 69 படத்தின் டைட்டிலும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 2025-ம் ஆண்டு புத்தாண்டு விஜய், அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 69 படத்துடன் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.