நடிகர் அஜித்தின் மச்சினனான ரிச்சர்ட் ரிஷியும், நடிகை யாஷிகா ஆனந்தும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. இந்த சர்ச்சை ஆரம்பமானது ரிச்சர்ட் ரிஷியின் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தான். கடந்த மாதம் ரிச்சர்ட் ரிஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதுவும் அந்த புகைப்படத்தில் யாஷிகா, ரிச்சர்டிற்கு முத்தம் கொடுத்தபடி போஸ் கொடுத்து இருந்தார்.
இந்த போட்டோவுக்கு ஹார்டின் எமோஜியையும் பறக்க விட்டு இருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிப்பதாக நினைத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவிட தொடங்கினர். இதையடுத்து எரியுற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக அடுத்தடுத்து யாஷிகா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடத் தொடங்கினார் ரிச்சர்ட். இதனால் கடந்த சில தினங்களாக இவர்களது காதல் விவகாரம் தான் கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக இருந்தது.
இதையும் படியுங்கள்... யாஷிகா உடன் லாங் டிரைவ் சென்ற போட்டோவை பதிவிட்ட அஜித் மச்சினன்... மாமாகுட்டி என கலாய்க்கும் நெட்டிசன்கள்
இப்படி தொடர்ந்து ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா உடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்ததால், யாஷிகா, அஜித் வீட்டு மருமகள் ஆகப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ரிச்சர்ட் ரிஷி மற்றும் யாஷிகா இருவருமே எந்தவித கருத்துமே தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த காதல் சர்ச்சை குறித்து நடிகை யாஷிகாவின் தாயார் முதன்முறையாக விளக்கம் அளித்து இருக்கிறார்.
அதன்படி யாஷிகாவும், ரிச்சர்ட் ரிஷியும் காதலிப்பதாக கூறப்படுவது உண்மையில்லை என தெரிவித்துள்ள அவர், அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம், அவர்கள் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படத்தின் புகைப்படங்கள், அந்தப் படம் ரிலீஸ் ஆகும் போது அனைவருக்கும் உண்மை தெரியவரும் என கூறி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், அடப்பாவிகளா விளம்பரத்துக்காகவா இப்படியெல்லாம் பண்ணுவீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... களைகட்டும் காதல்! 45 வயதாகும் அஜித் மச்சினன் ரிச்சர்ட் மேல படுத்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் யாஷிகா!