பிரபாஸ் நடித்து முடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி திருப்பதியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சியை நடத்த படக்குழு திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
பிரபாஸின் 'ஆதிபுருஷ்' திரைப்படம், இராமாயண புராண கதையை அடிப்படையாகக் கொண்டு, எடுக்கப்பட்டுள்ளது. ராமர் வேடத்தில், பாகுபலி நாயகன் பிரபாஸும், சீதாவாக பாலிவுட் நாயகி கிருத்தி சனோனும் நடித்துள்ளனர். ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்துள்ளார். ஓம் ரவுத் இயக்கியுள்ள இந்த படத்தை, பிரமாண்ட பட்ஜெட்டில் பூஷன் குமார் தயாரித்துள்ளார்.
சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியின் கவர்ச்சி களோபரம்! ஹாட் போட்டோஸ்!
'ஆதிபுருஷ்' திரைப்படம், ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பிரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நாளை திருப்பதியில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு படு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
பிரபாஸுக்கு 50 அடியில் கட்டவோ, மிகப்பெரிய மேடை, பார்வையாளர்களுக்கு அமர சேர்கள் போன்றவை மிகப்பெரிய இடங்களில் போடப்பட்டுள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் 100 நடனக் கலைஞர்களும், 100 பாடகர்களும் ஆதிபுருஷம் மற்றும் ராமாயணப் பாடல்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வை பிரசாந்த் வர்மா இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'மாவீரன்' படத்தின் முக்கிய பணியை முடித்த சிவகார்த்திகேயன்! புகைப்படத்துடன் வெளியான தகவல்..!
நிகழ்ச்சியை தொகுப்பாளினி ஜான்சி தொகுத்து வழங்க உள்ளார். நாளை நடைபெறவுள்ள இந்த மிகப்பெரிய நிகழ்வின் வெற்றிக்காக ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களும் தயாராகி வருகின்றனர். மறுபுறம், இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மற்றொரு டிரெய்லரும் வெளியிடப் போவதாகத் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.