திரையுலகில் அறிமுகமாகும் இளம் நடிகர்கள், நடிப்பின் மீது உள்ள டெடிகேஷனை வெளிப்படுத்தும் விதமாகவும், ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், ரிஸ்க்கான கதாபாத்திரங்களை கூட... மெனக்கட்டு நடிக்கின்றனர். இப்படி தன்னுடைய முதல் படத்திலிருந்து, திறமையான நடிப்பால் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் அட்டகத்தி தினேஷ்.
2012 ஆம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவருடைய நடிப்புக்கு, ரசிகர்ல்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இதைத்தொடர்ந்த அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். மேலும் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே, ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம், போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அம்பரீஷ் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட 80-ஸ் பிரபலங்கள்! போட்டோஸ்
இவர் நடிப்பில், வெளியான முக்கிய திரைப்படங்களில் ஒன்று 'குக்கூ' இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என பலர் கூறிய நிலையில், ஏனோ சில காரணங்களால் அவருக்கு அந்த விருது கிடைக்காமல் போனது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கண் தெரியாதவர் வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தன்னுடைய கண்ணை வித்தியாசமான வைத்து நடித்தது இவருக்கே சில பிரச்சனைகளை கொண்டு வந்ததாக கூறி உள்ளார், இயக்குனர் பா ரஞ்சித்.
இது குறித்து பேட்டி ஒன்றில் குறுகையில், 'அட்டகத்தி தினேஷ்' குக்கூ படத்தில் பார்வை இல்லாதவர் போல் நடித்தார். படம் முழுக்க அவர் கண்களை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு நடித்ததால், சில நாட்களில் உண்மையிலேயே அவருக்கு பார்வை போய்விட்டது. கிட்டத்தட்ட அவரது கண்கள் படத்தில் நடித்தது போலவே மாறியது. பின்னர் பல்வேறு சிகிச்சைகள் கொடுத்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். என கூறியதோடு, கதாபாத்திரத்திற்காக மிகவும் டெடிகேஷனோடு செயல்படுபவர் தினேஷ் என பாராட்டியும் உள்ளார்.
அப்பா ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு! இதை நினைத்து கூட பார்த்ததில்லை என உருகிய ஐஸ்வர்யா!
Pa Ranjith
தினேஷ் குறித்து பா ரஞ்சித் கூறியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் அட்டகத்தி கணேஷ் நடிப்பில் வெளியான திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து, இரண்டாம் உலகப்போரில் கடைசி குண்டு, ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அட்டகத்தி தினேஷ் ஜே பேபி, மற்றும் தீரும் போறும், ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.