தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய தந்தையும் சூப்பர் ஸ்டாருமான ரஜினி, காரில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உங்களை பார்த்து வளர்ந்தேன், ஆனால் உங்களை வைத்து ஒருநாள் படம் இயக்குவேன் என்பதை நினைத்துக் கூட பார்த்ததில்லை. உங்களுடன் சேர்ந்து இந்த உலகத்தை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை இப்போது உணர்கிறேன். ஒவ்வொரு நாளும், உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் 'அப்பா' என்று பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த உருக்கமான பதிவும், அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் தலைவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.