கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது.
Yashika anand
இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
yashika
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
Yashika anand
இதனிடையே யாஷிகா ஆனந்த் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாகவும், தோழியின் மரணத்திற்கு காரணமானதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Yashika anand
விபத்து நிகழ்ந்த அன்று தான் குடிக்கவில்லை என்று யாஷிகா ஆனந்தே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். சில தரக்குறைவான மனிதர்கள் நான் கார் ஓட்டும் போது மது அருந்தி இருந்ததாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதுகுறித்து உங்களிடம் ஒரு விஷயத்தை உறுதிபடுத்த விரும்புகிறேன். போலீஸ் தரப்பிலிருந்தே நாங்கள் யாரும் குடித்துவிட்டு வண்டி ஓட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி மட்டும் நான் குடித்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் தான் இருந்திருப்பேன், ஹாஸ்பிட்டலில் இல்லை. போலீஸ் மற்றும் மருத்துவர்களின் அறிக்கையிலும் அப்படி தான் உள்ளது.
Yashika anand
சில நாட்களாகவே போலியான மனிதர்கள் சிலர் என்னைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் இது மிகவும் சிக்கலான விஷயம். மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சில போலி ஊடகங்கள் பார்வையாளர்களை கவர்வதற்காக என்னைப் பற்றி போலியான செய்திகளை பதிவிட்டு வருகின்றன. அது அவங்களுக்கு தான் அவமானம். இதேமாதிரி நடந்ததற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால் சிலர் இப்போதும் வதந்திகளை பரப்புவதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.