வாவ் மணப்பெண்ணாக மாறிய யாஷிகா ஆனந்த்..ஜொலிக்கும் நாயகியின் கிளிக்ஸ்

First Published | Aug 23, 2022, 8:24 PM IST

யாஷிகா தற்போது மஞ்சள் நிற பட்டு புடவையில் ஜொலிக்கும் நகைகள் அணிந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

Yashika Aannand

கவர்ச்சிக்கடல் என பெயர் பெற்றவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஏகப்பட்ட கவர்ச்சிகளைக் கொட்டி ரசிகர்களை தன்வசம் ஈர்த்திருந்தார்.

yashika aannand

பின்னர் விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் குட்டை டவுசருடன் கவர்ச்சி புயலாக திரிந்த இவருக்கு ஏகபோக ரசிகர்கள் இருந்தார்கள். இருந்தும் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு...போட்டோ போதாதென நீச்சல் உடை வீடியோவையும் வெளியிட்ட பிக்பாஸ் யாஷிகா..

Tap to resize

yashika aannand

பிக் பாஸிலிருந்து வெளியேறுவதற்குள் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிக்கினார். பிறகு பட வாய்ப்புகள் இவர் கைவசம் வந்தன. அதன்படி ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வாழ்த்துக்களை பெற்று வந்தார் யாஷிகா.

இதற்கிடையே மகாபலிபுரத்திலிருந்து நண்பர்களுடன் சென்னை  திரும்பி கொண்டிருந்தார் இவர் தனது காரை பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். சம்பவ இடத்திலேயே அவரது தோழி உயிரிழக்க  இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு...54 வயதில் திருமணமா? பெண் பார்க்கிறார்களா குடும்பத்தினர்... எஸ்.ஜே.சூர்யா போட்டுடைத்த உண்மை! 

yashika aannand

இதை தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த யாஷிகா அவ்வப்போது தனது வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு ரசிகர்களிடமிருந்து ஆறுதலை பெற்று வந்தார். பின்னர் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பினார் யாஷிகா.

மேலும் செய்திகளுக்கு.. ஆஸ்கர் விருதுக்கு போகும் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!

yashika aannand

தற்போது முன்பை விட கவர்ச்சியை அதிகமாக காட்டி வருகிறார். சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இவர் பிறந்தநாள் புகைப்படங்களாக  நீச்சல் குளத்தில் நின்றபடி வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

பின்னர் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் நீருப்பை சந்திப்பதற்காக யாஷிகா வருகை தந்திருந்தார். இவர்கள் இருவரும் முன்னால் காதலர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே காதல் முறிவு இவர்கள் பேசியிருந்ததும் குறித்தான வீடியோ வைரலானது.

yashika aannand

இந்நிலையில் யாஷிகா தற்போது மஞ்சள் நிற பட்டு புடவையில் ஜொலிக்கும் நகைகள் அணிந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. பார்ப்பதற்கு மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!