தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி அஜித். இவரைப் போலவே இவரது சகோதரர் ரிச்சர்ட் ரிஷியும், தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், இதைத்தொடர்ந்து 'காதல் வைரஸ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் கிரவுட் ஃபண்ட் மூலமாக இயக்குனர் மோகன் ஜி இயக்கிய திரகுபதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, ரிச்சர்ட் ரிஷி திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைத்ததது.
ரிச்சர்ட் ரிஷி சமீபத்தில், நடிகை யாஷிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தார். அதில் யாஷிகா அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் இருந்ததை கண்டு ரசிகர்கள் இருவரும் காதலித்து வருகிறார்களா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததோடு, இருவருக்கும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர்.