காதல் தோல்வியில் இருந்து மீண்டும், உடல் எடையை குறைத்து... மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த இலியானா கடந்த ஓரிரு வருடங்களாகவே, பிரபல நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபஸ்டியனை காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது குறித்து இருவருமே வெளிப்படையாக கூறியதில்லை. அதே சமயம் இருவரும் வெளிநாடுகளுக்கு, டேட்டிங் செய்து வருவதாகவும், லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இணைந்து வாழ்வதாகவும் பாலிவுட் ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே தாயாகும் தகவலை தெரிவித்து இருந்தார் வெளியான.