தென்னிந்திய மொழியில் வெளியாகி, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களில் ஒன்று 'பாகுபலி'. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாறு படைத்தது. இதன் இரண்டு பாகங்களும் சுமார் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.