இசைஞானி இளையராஜா 80வது பிறந்த நாளில் படப்பிடிப்பை துவங்கிய விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் பாரதி கணேஷ்!

Published : Jun 02, 2023, 02:27 PM IST

இயக்குனர் பாரதி கணேஷ், தன்னுடைய படப்பிடிப்பை... இசைஞானி இளையராஜா 80வது பிறந்த நாளில் அவரின் ஆசியுடன் துவங்கியுள்ளார்.  

PREV
14
இசைஞானி இளையராஜா 80வது பிறந்த நாளில் படப்பிடிப்பை துவங்கிய விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பட இயக்குனர் பாரதி கணேஷ்!

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'கண்ணுபடப் போகுதைய்யா' படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். தற்போது 5E கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார் பாரதி கணேஷ்.

24

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இன்று இசைஞானியின் 80வது பிறந்த நாளன்று அவரிடம் நேரில் ஆசி பெற்று இந்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கி உள்ளார் பாரதி கணேஷ்.

வசூலில் பிக் அப் ஆகாததால்... இன்று ஓடிடியில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம்!

34

சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில்  இயற்கை, வாரிசு புகழ் நடிகர் கிக் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி,  குமரன் (மகாலட்சுமி மகளிர் கல்லூரி MD), அஜய் (ஜமீலா A.K), ஆஷிகா யாஷ் (Dada)  பெங்களூரு ஈஸ்வரி அம்மா, ஜாஸ்பர், மணிரத்னம், மானஸ்வி கொட்டாச்சி,  ஷிவானி ஹரிகுமார், ராக்ஸ்டார் கமலேஷ், ஆர்வன் வெற்றி இளங்கோ, முகுந்தன் மற்றும் நிஜய் என்ற திண்டுக்கல் நஷிர் ஆகியோர் நடிக்கின்றனர்.

44

ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபு கவனிக்க, படத்தொகுப்பை நாகூர் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார், இன்றைய 5G ஜெனேரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல் செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான கருத்தினை விளக்கும் ஒரு பதிவாக சென்னை சிட்டியில் நடக்கும் ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்தப்படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

என் கதாபாத்திரம் ஒவ்வொரு பெண்ணுடனும் கனெக்ட் ஆகும்..! 'மாமன்னன்' அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேச்சு!

Read more Photos on
click me!

Recommended Stories