இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கல்கி, தென்னகத்தை ஆண்ட சோழ மன்னனான 'அருண்மொழி வர்மன்' பற்றிய கதையை, வரலாற்று சுவடுகளுடன் புனையப்பட்ட நாவலாக எழுதிய நாவல் 'பொன்னியின் செல்வன்'. இதனை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. 500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக காத்தியும், நடித்திருந்தனர்.
இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி... பரிசு கொடுத்து... பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!
மேலும் ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் நடித்திருந்தனர். பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பிரபு, விக்ரம் பிரபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்கி, நேர்த்தியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரு பாகங்களையும் இயக்கி இருந்தார் இயக்குனர் மணிரத்னம்.
Ponniyin Selvan
இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் சுமார் 300 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முதல் பாகத்தின் வசூலை நெருங்க முடியாத நிலையில், தற்போது வெளியான ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.