இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. உதயநிதி அரசியலில் நுழைந்து... அமைச்சர் பதவியை கைப்பற்றிவிட்டதால், இனி மக்கள் பணியே மகேசன் பணி... என்கிற பழமொழிக்கு ஏற்ப முழு நேர அரசியலில் கவனம் செலுத்தஉள்ளதால் , இனி எந்த திரைப்படங்களிலும் நடிக்க போவது இல்லை என்றும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'மாமான்னன்' படம் தான் தன்னுடைய கடைசி படம் என்பதையும் அறிவித்தார்.
இந்நிலையில் இப்படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த படத்தின் ஆடியோ லான்ச் இன்று, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.