நடிகை சமந்தா 'குஷி' படத்தின் படப்பிடிப்புக்காக, துருக்கி சென்றுள்ள நிலையில்... அங்கு விஜய் தேவரகொண்டாவுடன் குடியும் கும்மாளமுமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றதில் இருந்து, சமந்தா தன்னுடைய வாழ்க்கையில் பல போராட்டங்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.
25
அதில் மிகவும் முக்கியமானது, மயோசிட்டிஸ் பிரச்சனை. சைதன்யாவை பிரிந்த... பின்னர் சுமார் 6 மாதத்திற்கு மேல், எழுந்து நிற்க கூட முடியாத நிலையில், மயோசிட்டிஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர் சிகிச்சைகளையும் மேற்கொண்டார்.
பின்னர் ஒருவழியாக, அந்த பிரச்சனையில் இருந்து மீண்டு... மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கிய நிலையில், இவர் நடிப்பில் வெளியான யசோதா, மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறாமல், சமந்தாவுக்கு ஷாக் கொடுத்தது.
45
இதை தொடர்ந்து, தற்போது சமந்தாவின் கை வசம் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வரும், குஷி... படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் நெருங்கி பழகி வருவதாகவும் சில தகவல்கள் தெலுங்கு திரையுலகில் அரசால் புரசலாக பரவி வந்த நிலையில், அதனை உடைக்கும் விதமாக இந்த போஸ்ட்டை போட்டுள்ளார்.
குஷி படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் துருக்கிக்கு சென்றுள்ள நிலையில்... சரக்கு பாட்டில் டேபிளில் இருக்க, விஜய் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளிட்டு விஜய் தேவரைகோண்டாவை நண்பன் என கூறியுள்ளார். இதன் மூலம் காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும், குடியும்... கும்மாளமுமாக துருக்கியில் வலம் வருகிறார் என்பது தெரிகிறது.