இந்நிலையில் இளையராஜா இன்று, தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள் முதல் அரசியல் வாதிகள் வரை காலை முதலே தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலமாகவும் நேரில் சென்றும் தெரிவித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து இளைய ராஜா தன்னுடைய குடும்பத்தினருடன், இந்த வருட பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை, இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.