என் மனைவி ஸ்ரீதேவிக்கு பின்... கீர்த்தி சுரேஷ் தான் இப்படி இருக்கிறார்! புகழ்ந்து தள்ளிய போனி கபூர்!

First Published | Jun 2, 2023, 8:22 PM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும், 'மாமன்னன் ' பட இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போனி கபூர், தன்னுடைய மனைவியுடன் கீர்த்தி சுரேஷை ஒப்பிட்டு பேசி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
 

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின்... அரசியலில் முழு கவனமும் செலுத்த உள்ளததால், தன்னுடைய கடைசி படத்தை,  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.இ ப்படம்,  இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியாக உள்ள நிலையில்...  படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.

இதன் முதல் கட்டமாக, நேற்று 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படு பிரம்மாண்டமாக நடந்தது. இதில் தமிழ் திரை உலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக கமலஹாசன், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, ஏ ஆர் முருகதாஸ், பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா போன்ற பலர் கலந்து கொண்டனர். 

'ஜென்டில்மேன் 2' கதையை கேட்ட கீரவாணி! அடுத்த மாதம் தொடங்கும் இசை பணிகள்! லேட்டஸ்ட் அப்டேட்!

Tap to resize

அதே போல், தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, ஆகிய படங்களை அடுத்தடுத்து தயாரித்த பிரபல பாலிவுட் இயக்குனரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் கலந்து கொண்டார். இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இவர் மேடையில் ஏறி ஓரிரு வார்த்தைகள் பேசும் போது, தன்னுடைய மனைவி ஸ்ரீதேவியுடன்...  கீர்த்தி சுரேஷை ஒப்பிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
 

தன்னைப் பொறுத்தவரை திரையுலகில் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு, மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் கவர்ச்சிகரமான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று புகழ்ந்து தள்ளினார். இவரது இந்த பேச்சு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷ், போனி கபூர் தயாரிப்பில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து கீர்த்தி விலகியதாக கூறப்பட்டது.

ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' படத்திற்கு 400 கோடி பணம்... 24 பர்சென்ட் வட்டிக்கு வாங்கப்பட்டதா? ராணா கூறிய தகவல்!

Latest Videos

click me!