KGF3 படப்பிடிப்பு துவங்குவது எப்போது..! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Published : Dec 24, 2022, 11:49 AM ISTUpdated : Dec 24, 2022, 11:51 AM IST

இயக்குனர் பிரஷாந்த் நீல் மற்றும் யாஷ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, யாஷ் மூன்றாம் பாகம் குறித்து வெளியாகியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
14
KGF3 படப்பிடிப்பு துவங்குவது எப்போது..!  வெளியான லேட்டஸ்ட் அப்டேட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

இயக்குனர் பிரஷாந்த் நீலின் திறமையான இயக்கமும், யாஷின் அதிரடி நடிப்பும், KGF1 மற்றும் KGF2 ஆகிய இரண்டு பாடங்களின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. எனவே தற்போது யாஷின் ரசிகர்கள் எப்போது இந்த  மூன்றாம் பாகம் உருவாகும் என கேள்வி எழுப்ப துவங்கி விட்டனர். ஏற்கனவே இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு துவங்குவது குறித்து எந்த தகவலையும் படக்குழு தெரிவிக்கவில்லை.
 

24

தற்போது இயக்குனர் பிரஷாந்த் நீல், பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை இயக்கி வருவதால், இந்த படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து... கே ஜி எஃப், படத்தின் மூன்றாம் பாகத்தின் பணிகள் துவங்க உள்ளதாக  இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் தெரிவித்துள்ளார்.

'வணங்கான்' படத்தை தொடர்ந்து... வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகும் சூர்யா? ஷாக்கிங் தகவல்!


 

34

கேஜிஎஃப் 3 படம் குறித்த அப்டேட்டால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கேஜிஎஃப்3 படத்தின் ஸ்கிரிப்ட் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே வெளியாகியுள்ள தகவலின் படி, பிரஷாந்த் நீல் இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதையை தயார் செய்து விட்டதாகவும், கே.ஜி.எஃப் மூன்றாவது பாகத்தில், யாஷின் இளமை காலம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் காட்டப்படும் விதத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
 

44

அதே போல் கடந்த இரண்டு பாகங்களை விட மூன்றாவது பாகத்தில், பிரஷாந்த் நீலின் சம்பளம் எக்கச்சக்கமாக எகிறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆறும், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தன்னுடைய 31ஆவது படத்தை நடிக்க உள்ளார் குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து சர்ச்சைக்கு நடுவே... கணவர் பிரசன்னாவுடன் சினேகா ரொமான்டிக் போட்டோ ஷூட்! கலக்கல் போட்டோஸ்!
 

click me!

Recommended Stories