இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட உள்ளதாகவும், காவல் துறை அதிகாரி ஒருவர் சந்தித்த நிகழ்வை தான் இந்த படத்தில் படமாக இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த காவல் துறை அதிகாரியாக தான் தற்போது தனுஷ் நடிக்க உள்ளார். இதுவரை காவல்துறை அதிகாரியாக தனுஷ் நடித்திராத நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.