Beast Vs KGF 2 : டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் KGF 2... விஜய்யின் பிடிவாதத்தால் சரிவை சந்திக்கும் பீஸ்ட்

Published : Apr 09, 2022, 03:11 PM IST

Beast Vs KGF 2 : தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு அதிக அளவில் நடந்து வந்தாலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கே.ஜி.எஃப் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறதாம். 

PREV
16
Beast Vs KGF 2 : டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் KGF 2... விஜய்யின் பிடிவாதத்தால் சரிவை சந்திக்கும் பீஸ்ட்

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் அதிகரித்ததன் காரணமாக பொங்கலுக்கு ரிலீசாக இருந்த ஆர்.ஆர்.ஆர், வலிமை, ராதே ஷ்யாம் போன்ற படங்கள் தள்ளிவைக்கப்பட்டன. இதையடுத்து பிப்ரவரி மாதமே தொற்று பரவல் குறையத்தொடங்கியதன் காரணமாக வெயிட்டிங்கில் இருந்த படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகின.

26

அந்த வகையில் முதலாவதாக வெளியான பெரிய படம் என்றால் அது அஜித்தின் வலிமை தான். கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வெளியான இப்படம் வெறிச்சோடி கிடந்த திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டத்தை வர வைத்து புத்துயிர் கொடுத்தது. இதையடுத்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்கள் வெளியானதால் திரையரங்குகள் திருவிழாக் கோலமாகின.

36

அந்த வகையில், தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி வருகிற ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் மற்றும் யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன. இந்த இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக ரிலீசாக உள்ளதால் நாடு முழுவதும் இந்த படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. 

46

ரிலீசுக்கு இன்னும் 3 நாட்களே எஞ்சி உள்ளதால் இப்படங்களின் டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் சுமார் 850 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. அதேபோல் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 250 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனால் தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கான முன்பதிவு அதிக அளவில் நடந்து வருகிறது.

56

ஆனால் தமிழகம் தவிர்த்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் கே.ஜி.எஃப் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறதாம். இதற்கு அதன்  புரமோஷனும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து மொழிகளிலும் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அப்படத்தின் நாயகன் யாஷ் தவறாமல் கலந்துகொண்டு வருகிறார்.

66

அதே வேளையில், பீஸ்ட் படத்தை பொருத்தவரை நடிகர் விஜய் தமிழை தவிர்த்து பிற மொழி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என பிடிவாதமாக இருப்பதனால், அதன் தாக்கம் அப்படத்தின் முன்பதிவிலேயே எதிரொலித்துள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழை தவிர பிற மொழிகளில் பீஸ்ட் படத்தின் வசூலும் பலத்த அடி வாங்க வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... முடிவுக்கு வருகிறது RRR படத்தின் வசூல் வேட்டை... ரூ.1000 கோடி வசூலித்தும் ‘பாகுபலி 2’ சாதனையை பீட் பண்ண முடியல

Read more Photos on
click me!

Recommended Stories