கையில் பேனா உடன் க்யூட் பேபி நயன்தாரா..காதலன் படம் முன் என்ன எழுதுறீங்க?

Kanmani P   | Asianet News
Published : Apr 09, 2022, 01:45 PM ISTUpdated : Apr 09, 2022, 01:47 PM IST

நயன்தாரா கிரிப்ட் எழுதுவது போன்ற அழகிய போஸ் கொடுத்துள்ளார். அவர் அமர்ந்திருக்கும் டேபிள் மேல் விக்னேஷ் சிவனின் புகைப்படம் உள்ளது. 

PREV
18
கையில் பேனா உடன் க்யூட் பேபி நயன்தாரா..காதலன் படம் முன் என்ன எழுதுறீங்க?
nayanthara

தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஜோடி என்றால் அது நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

28
nayanthara

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக இருக்கும் நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து ரஜினி, விஜய் ,அஜித் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியானார் நயன்.

38
nayanthara

வெற்றி களிப்புக்கு இடையே நயன்தாரா சில காதல் கிசு கிசுவிலும் சிக்கினார். வளர்ந்து வரும் நாயகியாக இருந்த பொழுது சிம்புவுடன் காதலில் இருந்த நயன் பின்னர் சில பிரச்சனைகளால் அவரை விட்டு விலகி சென்றார்.  

மேலும் செய்திகளுக்கு...நயனுக்கும், விக்கிக்கும் கல்யாணமே முடிஞ்சிருச்சா?... என்ன சொல்லவே இல்ல!! - போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

48
nayanthara

காதல் முறிவுக்கு பிறகு சில நாட்கள் எந்த சிக்கலிலும் சிக்காமல் ஒதுங்கி இருந்த நயன் பின்னர் பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவாவை காதலித்தார். இருவரும் கோவில் குளம் என சுற்றி வந்தனர். ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான பிரபு தேவா..நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை விவாகரத்து செய்தார். 

58
nayanthara

காதல் பறவைகள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீரென இருவரும் பிரிந்தனர். முன்னதாக காதலனை கைப்பிடிக்க உள்ளதால் சினிமாவை விட்டு விலகுவதாக நயன்தாரா கூறியிருந்தார். இந்நிலையில் இருவரும் எந்த காரணமும் வெளியில் கூறாமல் பிரிந்தனர். 

68
nayanthara

இதையடுத்து பிரபு தேவா காலதாமதம் செய்யாமல் மறுமணம் செய்து கொண்டார். அதேபோல நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் செட்டில் ஆனார். இவர்கள் இருவரும் பல வருட காதல் உறவில் உள்ளதோடு ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.

78
nayanthara

இவர்கள் இருவரும் கோவில், சுற்றுலா தளம் என பல இடங்களில் சுற்றி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வரும். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு இருவரும் சென்று வந்த போட்டோக்கள் உலா  வந்தன. 

மேலும் செய்திகளுக்கு...Nayanthara: AK 62 படம் தந்த மவுஸு..சம்பளமாக கோடிகளை பல மடங்கு உயர்த்தி கேட்ட நயன்தாரா..!

88
nayanthara

இந்நிலையில் நயன்தாரா ஸ்கிரிப்ட் எழுதுவது போன்ற அழகிய போஸ் கொடுத்துள்ளார். அவர் அமர்ந்திருக்கும் டேபிள் மேல் விக்னேஷ் சிவனின் புகைப்படம் உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories