Beast movie : புரமோஷனுக்கு வர மறுத்த விஜய்... கோபத்தில் ரசிகர்கள் - பிற மொழிகளில் பிக் அப் ஆகுமா பீஸ்ட்?

Published : Apr 09, 2022, 12:34 PM IST

Beast movie : பொதுவாக பான் இந்தியா படங்கள் வெளியானால் அப்படத்தின் ஹீரோக்கள் தான் அனைத்து மொழிகளிலும் புரமோட் செய்வர். பாகுபலி முதல் அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர் வரை இதே நடைமுறையை தான் பின்பற்றி வருகின்றனர்.

PREV
16
Beast movie : புரமோஷனுக்கு வர மறுத்த விஜய்... கோபத்தில் ரசிகர்கள் - பிற மொழிகளில் பிக் அப் ஆகுமா பீஸ்ட்?

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பீஸ்ட். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, அபர்ணா தாஸ், ஷான் டாம் சாக்கோ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

26

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். தமிழ் மொழியில் தயாராகி உள்ள இப்படத்தை இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். வருகிற ஏப்ரல் 13-ந் தேதி இப்படம் மேற்கண்ட ஐந்து மொழிகளிலும் ரிலீசாக உள்ளது.

ரிலீஸ் நெருங்கி வருவதால், பீஸ்ட் படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. தமிழில் இதற்காக இயக்குனர் நெல்சனுடன் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகர் விஜய். இந்நிகழ்ச்சி நாளை இரவு 9 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. 

36

ரிலீசுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ளதால், பிற மொழி புரமோஷன் பணிகளும் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி முதலில் பீஸ்ட் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்வார் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

46

இந்நிகழ்ச்சியில், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இப்படத்தை தெலுங்கில் வெளியிடும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகர் விஜய் கலந்துகொள்ளாதது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

56

பொதுவாக பான் இந்தியா படங்கள் வெளியானால் அப்படத்தின் ஹீரோக்கள் தான் அனைத்து மொழிகளிலும் புரமோட் செய்வர். பாகுபலி முதல் அண்மையில் வெளியான ஆர்.ஆர்.ஆர் வரை இதே நடைமுறையை தான் பின்பற்றி வருகின்றனர். ஆனால் விஜய் பிறமொழி புரமோஷனுக்கு வர மறுப்பதால், அவரது படங்களுக்கு இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வரவேற்பு கிடைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

66

குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்களுக்கும் அம்மாநிலங்களில் அதிக மவுசு உள்ளது. அப்படி இருந்தும் நடிகர் விஜய் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வராதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் அடுத்ததாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான புரமோஷன் நிகழ்ச்சியிலாவது பங்கேற்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... KGF 2 : விழிப்புணர்வுக்காக உதவிய ‘கே.ஜி.எஃப் 2’ பஞ்ச் டயலாக்... ‘நச்’ என மீம் போட்டு அசத்திய போலீசார்

Read more Photos on
click me!

Recommended Stories