Rashmika Mandanna : தள்ளி நில்லுடி... விஜய்யுடன் நெருக்கம் காட்டிய ராஷ்மிகாவை விளாசிய பிக்பாஸ் பிரபலம்

Published : Apr 09, 2022, 10:17 AM IST

Rashmika Mandanna : விஜய்யுடன் நடிகை ராஷ்மிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிக்பாஸ் பிரபலம் ‘தள்ளி நில்லுடி’ என கேப்சன் கொடுத்துள்ளார். 

PREV
14
Rashmika Mandanna : தள்ளி நில்லுடி... விஜய்யுடன் நெருக்கம் காட்டிய ராஷ்மிகாவை விளாசிய பிக்பாஸ் பிரபலம்

பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்ததாக தளபதி 66 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன்மூலம் நடிகர் விஜய்யுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார் ராஷ்மிகா.

24

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். தளபதி 66 படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, நடிகை ராஷ்மிகா, தயாரிப்பாளர் தில் ராஜு, பாடலாசிரியர் விவேக், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

34

இதில் நடிகர் விஜய்யை கண்டதும் உற்சாகத்தில் துள்ளிக்குதித்த ராஷ்மிகா, கியூட்டாக போஸ் கொடுத்தபடி நடிகர் விஜய்யுடன் ஏராளமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படங்கள் டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரல் ஆனது.

44

இந்நிலையில், விஜய்யுடன் நடிகை ராஷ்மிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பசுபதி, அதில் கோபமான எமோஜிகளுடன் ‘தள்ளி நில்லுடி’ என கேப்சன் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன பொறாமையா என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... KGF : ரசிகர்களுக்கு ராக்கி பாய் கொடுத்த சர்ப்ரைஸ்... Beast-க்கு முன்னரே தியேட்டர்களில் ரிலீசானது கே.ஜி.எஃப்

Read more Photos on
click me!

Recommended Stories