பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான ‘தமிழ்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஹரி. விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சாமி திரைப்படம், இயக்குனர் ஹரிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியதன் மூலம் நட்சத்திர இயக்குனராக உயர்ந்தார்.