KGF 2 Review : ‘பீஸ்ட்’-ஐ பீட் பண்ணுமா கே.ஜி.எஃப் 2... படம் அசத்தலா? சொதப்பலா? - முழு விமர்சனம் இதோ

Published : Apr 14, 2022, 09:13 AM IST

KGF 2 review : பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் விமர்சனம்.

PREV
17
KGF 2 Review : ‘பீஸ்ட்’-ஐ பீட் பண்ணுமா கே.ஜி.எஃப் 2... படம் அசத்தலா? சொதப்பலா? - முழு விமர்சனம் இதோ

கருடாவை கொன்ற பின்னர் கே.ஜி.எஃப்-ஐ ராக்கி பாயான யாஷ், தனது கண்ட்ரோலுக்கு கொண்டு வருவது போல் முதல் பாகத்தை முடித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாம் பாகத்தில் கே.ஜி.எஃப்-ல் உள்ள தங்க சுரங்கத்தில் வேலை பார்க்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து நன்கு பார்த்துக் கொள்கிறார் யாஷ்.

27

யாஷ் ஆட்சி செய்வது பிடிக்காத வில்லன் அதீரா தனக்கு இருக்கும் அரசியல் பலத்துடன் கே.ஜி.எஃப்பை கைப்பற்ற முயல்கிறார். இறுதியில் அதீராவின் சூழ்ச்சிகளை நடிகர் யாஷ் தடுத்தாரா? அல்லது யாஷை வீழ்த்தி கே.ஜி.எஃப் சாம்ராஜியத்தை வில்லன் அதீரா கைப்பற்றினாரா என்பதை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் சொல்லியுள்ள படம் தான் கே.ஜி.எஃப் 2.

37

நாயகன் யாஷ், முதல் பாகத்தை போன்று இதிலும் செம்ம மாஸாக இருக்கிறார். படம் முழுக்க கெத்தான தோற்றத்துடன் வலம் வரும் யாஷ், ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டைய கிளப்பி உள்ளார். சில காட்சிகள் பார்க்கும் போதே நமக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. அவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பலம், சேர்த்துள்ளது.

47

நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் அழகு தேவதையாக மிளிர்கிறார். குறைந்த அளவிலான காட்சிகளே வந்தாலும், திறம்பட நடித்து கைதட்டல்களை பெறுகிறார். பிரதமராக நடித்துள்ள ரவீனா டண்டன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். 

57

அதீரா என்கிற மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சஞ்சய் தத். யாஷுக்கும் இவருக்கும் இடையேயான காட்சிகள் தியேட்டரை அதிர வைக்கின்றன. மேலும் பிரகாஷ் ராஜ், சரண், மாளவிகா அவினாஷ் ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

67

இயக்குனர் பிரசாந்த் நீல், முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தையும் மாஸாக உருவாக்கி உள்ளார். முதல் பாகத்தை விட இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக உள்ளது. டெக்னிக்கலாக இப்படம் பலமாக இருந்தாலும், சில இடங்களில் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. நாயகன் யாஷின் கதாபாத்திரத்திற்கு இவர் வைத்து மாஸ் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. 

77

ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் ஓகேவாக இருந்தாலும், பின்னணி இசையில் பட்டைய கிளப்பி உள்ளார். மாஸ் காட்சிகளுக்கு இவர் பின்னணி இசையும் உயிர்கொடுத்துள்ளன. அதேபோல் புவன் கவுடாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. ஆகமொத்தம் கே.ஜி.எஃப் 2 ரியல் பீஸ்ட்டாக மாஸ் காட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... KGF 2 review : ராக்கி பாயின் மாஸ்... மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - ‘கே.ஜி.எஃப் 2’ டுவிட்டர் விமர்சனம்

Read more Photos on
click me!

Recommended Stories