நெல்சன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
28
beast
சன்பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது.
38
beast
இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் கதை ஒரு வணிக வளாகத்தை சுற்றி நடைபெறுகிறது.
48
Beast
வீரராகவன் விஜயை பார்க்க அதிகாலையில் இருந்தே ரசிகர் கூட்டம் அலை மோதி வருகிறது. மிகப்பெரிய கட்டவுட், பாலபிஷேகம், பட்டாசு என திரையங்கு வளாகமே தூள் பறந்தது.
58
Beast
படம் வெளியான முதல் நாளில் 38 முதல் 40 கோடியையும், ப்ரீ ரிலீஸ் மூலம் இதுவரை ரூ. 230 கோடிக்கு மேல் கல்லா கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
68
Beast
இதற்கிடையே திருப்பூரில் செயல்படும் கம்பெனியில் தொழிலார்களுக்கு பீஸ்ட் டிக்கெட் வழங்கி ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளித்து விஜய் பேன் என காட்டியுள்ளனர்.
78
Beast
அதேபோல டிக்கெட் முன் பதிவு செய்பவர்களுக்கு கொத்து பரோட்டா இலவசம், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அவரவர் பணியில் அதகளப்படுத்தினர் விஜய் ரசிகர்கள்.
88
Beast
அந்த வகையில் தருமபுரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தொண்டர் அணி பொறுப்பாளரான நவீன் தனது இரண்டு வயதான ஆண் குழந்தைக்கு பீஸ்ட் திரைப்படம் வெளியான திரையரங்கில் பெயர் சூட்டும் விழாவை நடத்தியுள்ளார்.