அருண் விஜயிடம் படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி உள்ள தாங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.
நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் ஹரியின் யானை படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சீயான் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சாமியின் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை.
26
yaanai movie
சூர்யாவின் அருவா படத்திற்காக காத்திருந்த ஹரி நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு தற்போது தனது மைத்துனன் அருண் விஜய்யை வைத்து யானை என்னும் படத்தை எடுத்துள்ளார். இந்த படம் ஜூலை ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக அமைந்து பேமிலி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. ஜானகி இதுவரை உலகம் முழுவதும் 5.5 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் மட்டும் 4.6 கோடி ரூபாய், கேரளாவில் 1 கோடி ரூபாயும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யானை படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அருண் விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி பரபரப்பாக வைரலாகி வருகிறது. அதாவது அருண் விஜயிடம் படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி உள்ள தாங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.
இந்த கேள்வியால் ஆடிப்போன அருண் விஜய் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது அவரின் பின்புறம் இருந்து ஒருவர் இது படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு என கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவிப்பது போல அருண் விஜயும் "ம்ம் "என தெரிவித்து அங்கிருந்து கிளம்பியுள்ளார்
66
vanitha vijayakumar
பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு அருண் விஜய் மற்றும் ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் அருண் விஜய் மட்டும் மூத்த மனைவியின் மகன். மற்றவர்கள் மஞ்சுளாவின் பிள்ளைகள். இவர்களில் மூத்தவரான வனிதா விஜயகுமார் தனது பெற்றோர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக குடும்பத்திலிருந்து விலகி உள்ளார். சமீபத்தில் யானை படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார் வனிதா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.