2000 ங்களின் பக்கத்தில் சிம்மாசனம், வல்லரசு, வானத்தைப்போல போன்ற வெற்றி படங்களை கொடுத்த விஜயகாந்த் சிம்மாசனத்தில் மூன்று வேடத்திலும், வானத்தைப்போல படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்து அசத்தி இருந்தார். அதேபோல கண்ணுபட போகுதய்யாவிலும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் இதில் உளவுத்துறை என்னும் படம் 125 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி படமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...ஆதித்ய கரிகாலனாக கெத்தான தோற்றத்தில் விக்ரம்... வைரலாகும் பொன்னியின் செல்வன் படத்தின் சர்ப்ரைஸ் போஸ்டர்
இதன் பிறகு 70 வயதான விஜயகாந்த் பல ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் தேர்தல் களங்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டார் விஜயகாந்த். இவருக்கு பதிலாக இவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான் தேமுதிகவின் பொறுப்பை கவனித்து வருகிறார்.