நடிகை நயன்தாராவுக்கு வயது 40-ஐ நெருங்கும் நிலையிலும், அவர் தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அதுமட்டுமின்றி தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் இவர் தான் முன்னணியில் உள்ளார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா தற்போது இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார்.