அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்த ‘வித் லவ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை செய்து வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், பெரிய பட்ஜெட் படமான 'வா வாத்தியார்' படத்தின் மொத்த வசூலை மிஞ்சியுள்ளது.
அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவான ‘வித் லவ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆறாவது நாளை கடந்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் முதன்முறையாக நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அனஸ்வரா ராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எம்ஆர்பி எண்டர்டெயின்மென்ட் மற்றும் சயோன் பிலிம்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
25
அபிஷன் ஜீவிந்த் அனஸ்வரா ராஜன் படம்
வெளியீட்டிற்கு முன்பே படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வர இப்படத்திற்கு, நல்ல ஓப்பனிங் கிடைத்தது. இப்படத்திற்கு இசையை ஷான் ரோல்டன் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஷ்ரேயாஸ் கிருஷ்ணா மற்றும் படத்தொகுப்பை சுரேஷ் குமார் செய்துள்ளார். காதலர் தின மாதம் மட்டுமல்லாமல், இளைஞர்களை குறிவைத்து வந்துள்ள வித் லவ் வசூல் சாதனையை படைத்தது வருகிறது. பாக்ஸ் ஆபிஸ் கணக்குகளின்படி, முதல் நாளில் ரூ.1.6 கோடி வசூலுடன் படம் தொடங்கியது.
35
6 நாள் வசூல்
தமிழ் பதிப்பில் அதிக பங்கு, தெலுங்கு பதிப்பில் குறைந்த அளவு வருமானமும் கிடைத்தது. சனிக்கிழமை ரூ.2.5 கோடி, ஞாயிற்றுக்கிழமை ரூ.3.2 கோடி வசூலித்து உச்சத்தை தொட்டது. ஆனால் வாரநாட்களில் வசூல் இயல்பாக குறைந்தது. திங்கட்கிழமை ரூ.1.65 கோடி, செவ்வாய்க்கிழமை ரூ.1.55 கோடி, புதன்கிழமை சுமார் ரூ.1.46 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ஆறு நாட்களில் ரூ.11.96 கோடி வசூலித்துள்ளது.
தற்போது படம் ரூ.12 கோடி வசூல் எல்லையை நெருங்கியுள்ளது. கார்த்தி நடித்த வா வாத்தியார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகளவில் ரூ.11.03 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தடுமாறியது.
55
வித் லவ் பட மொத்த வசூல்
இதற்கு மாறாக, குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘வித் லவ் முதல் வாரத்திலேயே ரூ.12 கோடியை நெருங்கி வருவது நல்ல கதையம்சம் இருந்தால் படம் தோல்வி அடையாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது முதல் இப்போது வரை நல்ல வசூலை பெற்று வரும் வித் லவ், வரும் வாரங்களில் மேலும் வசூலை வாரி குவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.