விஜயாவை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய சிந்தாமணி.! நடுத்தெருவுக்கு வரப்போகும் முத்து குடும்பம்.! சிறகடிக்க ஆசை அப்டேட்.!

Published : Feb 12, 2026, 03:38 PM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா மற்றும் மனோஜை ஏமாற்றி சிந்தாமணி அவரது வீட்டை எழுதி வாங்கி இருக்கிறார். இதனால் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்கிற பரபரப்பு எழுந்துள்ளது.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் ‘சிறகடிக்க ஆசை’. ஒருபுறம் மனோஜ் தொடர்ந்த டைவர்ஸ் வழக்கு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் விஜயா தனது வீட்டை தன் கணவருக்கு தெரியாமல் சிந்தாமணி மூலம் ஒருவரிடம் அடகு வைக்கிறார். ஆனால் இது சிந்தாமணியின் ஏமாற்று வேலை என்பது ப்ரோமோவை பார்க்கும் பொழுது தெரிகிறது.

24
சிந்தாமணி விஜயாவுக்கு கொடுத்த ஐடியா

விஜயா தனக்கு பணத்தேவை இருப்பதாக பார்வதியிடம் கூறிக் கொண்டிருக்க, அங்கு வரும் சிந்தாமணி உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்கிறார். அப்போது விஜயா ஏழு லட்சம் வேண்டும் என்று கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து சிந்தாமணி, “உங்களுக்கு கடன் கொடுத்த பைனான்சியரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கலாம். உங்கள் வீட்டுக் கடனை அந்த பைனான்சியர் பேங்கில் கட்டி விட்டார். வீட்டுப் பத்திரம் உங்களிடம் இருக்கிறது. அதை கொடுத்தால் அவர் உங்களுக்கு கடன் கொடுப்பார்” என்று சிந்தாமணி ஐடியா கொடுக்கிறார்.

34
அண்ணாமலை கையெழுத்தை போடும் மனோஜ்

இந்த விஷயத்தை மனோஜிடம் கூறுவதற்காக விஜயா ஷோரூமுக்கு செல்கிறார். அங்கு மனோஜ் இந்த பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கலாம் என்று கூறுகிறார். அதற்கு உன்னுடைய அப்பாவின் கையெழுத்து வேண்டுமே என்று சொல்ல, அதை நானே போடுகிறேன் என்று மனோஜ் கூறுகிறார். இந்த நிலையில் இரவு முழுவதும் அமர்ந்து தனது தந்தையின் கையெழுத்தை பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் மனோஜ். மறுநாள் சிந்தாமணி, மனோஜ், விஜயா ஆகிய மூவரும் பைனான்சியரிடம் செல்ல, அவர் விஜயா மற்றும் விஜயா கணவர் அண்ணாமலை இருவரின் கையெழுத்தும் வேண்டும் என்று கூறுகிறார்.

44
வசமாக சிக்கிய விஜயா

அப்போது குறுக்கிடும் சிந்தாமணி, மனோஜ் அவரது தந்தையின் கையெழுத்தை போடுவார் என்று கூறுகிறார். மனோஜும் தந்தையின் கையெழுத்தை பத்திரத்தில் போட்டு கடனைப் பெறுகிறார். ஆனால் இது பைனான்சியர் மற்றும் சிந்தாமணி இருவரும் இணைந்து விஜயாவிடமிருந்து வீட்டைப் பறிக்க செய்வதற்கான சதி என்பது தெரிய வருகிறது. ஒருவேளை சிந்தாமணி விஜயாவிடமிருந்து வீட்டை அபகரித்துக் கொண்டால், ஒட்டுமொத்த குடும்பமுமே நடுத்தெருவிற்கு வரும் சூழல் உருவாகும். இனி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories