
சின்னத்திரை சீரியல்கள் என்றாலே சன் டிவி என்றிருந்த காலம் போய் தற்போது அதற்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளன. டிஆர்பி ரேஸிலும் சன் டிவிக்கு மற்ற இரண்டு சேனல்களும் செம டஃப் கொடுத்து வருகின்றன. இந்த வாரம் மூன்று ஜீ தமிழ் சீரியல்கள் டாப் 10 சீரியல்கள் பட்டியலில் இணைந்திருக்கின்றன. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜீ தமிழில் வெற்றிநடை போட்டு வரும் புத்தம் புது சீரியல்களான அயலி மற்றும் பாரிஜாதம் ஆகிய இரண்டு தொடர்களும் ஒரே கதைக்களத்தில் இணைந்து பயணிக்கும் மகா சங்கமத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அதற்கான டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து டாப் 10 பட்டியலில் 10ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த இரண்டு சீரியல்களும் டாப் 10 ரேஸில் நுழைவது இதுவே முதன்முறை ஆகும். இந்த மகா சங்கமத்திற்கு இந்த வாரம் 5.28 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திக் ராஜ் நடிப்பில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் தான் கார்த்திகை தீபம். பிரைம் டைம் சீரியலான இது நீண்ட இடைவெளிக்கு பின்னர் டாப் 10 சீரியல்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கடந்த வாரம் 11வது இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 5.42 டிஆர்பி உடன் 9-ம் இடத்துக்கு தாவி உள்ளது.
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான சின்ன மருமகள், விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 6.5 டிஆர்பி உடன் 9-ம் இடத்தில் இருந்தது. இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 8-ம் இடத்துக்கு சென்றுள்ள சின்ன மருமகள் சீரியலுக்கு 6.25 புள்ளிகள் கிடைத்துள்ளன.
விஜய் டிவியின் மற்றுமொரு சூப்பர் ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் இந்த வாரம் டிஆர்பி ரேஸில் முன்னேறிச் சென்றிருக்கிறது. கடந்த வாரம் 7.15 டிஆர்பி உடன் 8-ம் இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7ம் இடத்தில் உள்ளது. இதற்கு 6.67 டிஆர்பி கிடைத்துள்ளது.
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல், டிஆர்பி ரேஸில் ஏற்ற இறக்கமின்றி கடந்த வாரமிருந்த அதே இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் 6-ம் இடத்திலேயே நீடிக்கும் அன்னம் சீரியலுக்கு 7.56 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
விஜய் டிவியின் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியலான சிறகடிக்க ஆசை, கடந்த வாரம் தான் டிஆர்பி ரேஸில் ஜெட் வேகத்தில் முன்னேறி 4-ம் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 5-ம் இடத்தில் உள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இந்த வாரம் 7.70 டிஆர்பி கிடைத்துள்ளது.
சன் டிவியில் கேப்ரியல்லா நாயகியாக நடித்து ஹிட்டான சீரியல் தான் மருமகள். இந்த சீரியலுக்கு ரூரல் ஏரியாக்களில் அதிகளவு ஆடியன்ஸ் உள்ளனர். கடந்த வாரம் 8.03 டிஆர்பி உடன் 5-ம் இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.98 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் உள்ளது.
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது மற்றும் விஜய் டிவியின் அய்யனார் துணை ஆகிய சீரியல்கள் இந்த வாரம் 3ம் இடத்தில் உள்ளன. இந்த இரண்டு சீரியல்களுமே 8.03 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. இதில் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரம் 7ம் இடத்தில் இருந்து இந்த வாரம் 3ம் இடத்துக்கு தாவி இருக்கிறது. அதேவேளையில் அய்யனார் துணை சீரியல் கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் 3ம் இடத்தை தக்க வைத்து உள்ளது.
சன் டிவியில் அதிக நாட்கள் ஓடும் சீரியல்களில் கயல் சீரியலும் ஒன்று. ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த வாரத்தைப் போல் இந்த வாரம் இரண்டாம் இடத்தை தக்க வைத்திருக்கிறது. கடந்த வாரம் இந்த சீரியலுக்கு 8.82 புள்ளிகளும் இந்த வாரம் 8.54 புள்ளிகளும் கிடைத்துள்ளது.
சன் டிவியின் சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியல்களின் மகா சங்கமம் தான் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் இந்த மகா சங்கமத்திற்கு 9.58 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருந்த நிலையில், இந்த வாரம் 10.25 புள்ளிகள் கிடைத்துள்ளன.