வெற்றிமாறன் கூறியபடி ராஜ ராஜ சோழன் இந்து கிடையாதா?... பின் எதற்காக சிவன் கோவிலை கட்டினார்? - உண்மை பின்னணி

Published : Oct 03, 2022, 11:02 AM IST

Raja Raja cholan : ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக காட்டி அதன்மூலம் நமது அடையாளங்கள் பறிக்கப்பட்டு வருவதாக இயக்குனர் வெற்றிமாறன் கூறியது பேசு பொருள் ஆகி உள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

PREV
15
வெற்றிமாறன் கூறியபடி ராஜ ராஜ சோழன் இந்து கிடையாதா?... பின் எதற்காக சிவன் கோவிலை கட்டினார்? - உண்மை பின்னணி

சோழர்களைப் பற்றிய படம் தான் பொன்னியின் செல்வன். அப்படம் வெளியாகி சர்ச்சைகளில் சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படம் பெரியளவில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் வெற்றிநடைபோட்டு வருகிறது. ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் ராஜ ராஜ சோழன் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பேசுபொருள் ஆகி உள்ளது.

25

அந்நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக காட்டி அதன்மூலம் நமது அடையாளங்கள் பறிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார் வெற்றிமாறன். அவரின் இந்த பேச்சு தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைப்பார்த்த நெட்டிசன்கள், ராஜ ராஜ சோழன் இந்து  இல்லை என்றால் அவர் ஏன் சிவன் கோவிலை கட்டினார் என கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார் நடிக்க மறுத்த கட்டப்பா கேரக்டர்... சத்யராஜுக்கு கிடைத்த சுவாரஸ்ய பின்னணி

35

இதுதவிர ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்றால் அவர் இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்று வெற்றிமாறனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து அவரை சாடி இருந்தார் பாஜகவின் எச்.ராஜா. இது ஒருபுறம் இருந்தாலும், வெற்றிமாறன் சொன்னது சரிதான் என்று அவருக்கு ஆதரவுக்குரலும் ஒருபுறம் ஒலித்த வண்ணம் உள்ளது. 

45

ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என வெற்றிமாறன் சொன்னது உண்மை தான் என குரல் கொடுக்கும் சிலர், அதற்காக சொல்லும் காரணம் என்னவென்றால், ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அந்த காலகட்டத்தில் சைவம், வைணவம், புத்த மதங்கள் தான் இருந்தன. இந்து மதம் என்பது நாளடைவில் வெள்ளைக்காரர்களின் ஆட்சி காலத்தில் வந்த ஒன்றாகும்.

55

அதனால் தான் ராஜ ராஜ சோழன், இந்து இல்லை என வெற்றிமாறன் சொன்னதாக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி ராஜ ராஜ சோழன், சைவத்தை தழுவி வந்தவர் என்பதால் தான் அவர் சிவன் கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது. நெட்டிசன்கள் இவ்வாறு பல்வேறு விதமான கருத்துக்களை கூறினாலும், வெற்றிமாறன் எதற்காக அப்படி சொன்னார் என்பது அவரே விளக்கம் அளித்தால் தான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... தொடரும் சோழர்களின் வசூல் வேட்டை... மூன்றே நாளில் கலெக்‌ஷனில் டபுள் செஞ்சுரி அடித்த பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories