மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் அறிமுகமான புதிதில் அடுத்தடுத்து ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, மாளவிகா மோகனனின் மார்க்கெட்டையும் பன்மடங்கு உயர்த்தியது.