நடந்து முடித்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடியவர் தாமரை செல்வி. தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும், பிக்பாஸ் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லாமல்... மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடியது இவர் மீது தனி மரியாதையை ஏற்படுத்தியது.