தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அறிமுகமாகியுள்ள, நடிகர் விக்ரமின் மகன் துருவ் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட, 'ஆதித்ய வர்மா' படத்தில் நடித்தார். 2019-ம் ஆண்டு வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களோடு படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு இல்லை என்பதே... இந்த படத்தின் தோல்விக்கு காரணம். எனினும் இந்த படத்தில் துருவ் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.