திரையரங்குகளில் இடைவேளை விடுவதற்கான காரணங்கள் பல உள்ளன. ரீல்களை மாற்றும் தொழில்நுட்ப தேவை ஒரு காரணம் என்றால், பாப்கார்ன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் மற்றொரு முக்கிய காரணம்.
நாம் ஒவ்வொருவரும் எப்போதாவது ஒரு திரையரங்கில் படம் பார்க்கச் சென்றிருக்க வேண்டும். படத்தின் நடுவில் ஒரு இடைவேளை (Intermission) வருகிறது. அதில் மக்கள் தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் பாப்கார்ன் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கச் செல்கிறார்கள்.
25
Reason for Intervals
ஆனால் இந்த இன்டர்வல் (Interval) பாப்கார்ன் சாப்பிடுவதற்கு மட்டும் அல்ல. இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம் வேறு ஒன்று இருக்கிறது. அது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.
35
Cinema theatres
திரையரங்குகளில் வெளியாகும் படங்களில் பார்வையாளர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க இடைவெளி கொடுக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் படங்களில் பெரிய ரீல்கள் இருந்தன. இடைவேளையின்போது முதல் ரீல் அகற்றப்பட்டு இரண்டாவது ரீல் மாற்றப்படும். இதற்காகவே தியேட்டர்களில் இடைவேளை வைக்கப்பட்டது.
45
Movie Intermission
ரீல்களை மாற்றுவதற்கான நேரம்தான் தியேட்டரில் இடைவேளையாக விடப்படுகிறது. இதுதான் படத்தின் நடுவே இன்டர்வல் வருவதற்கான தொழில்நுட்பக் காரணம். இப்போது ரீல்களை மாற்றும் தேவை இல்லை. இருந்தாலும் தியேட்டர்களில் இடைவேளை விடுவது தொடர்கிறது.
55
Theatres and Intervals
இன்றும் திரையரங்கில் இடைவேளை இருப்பதற்கு முக்கியக் காரணம் ஒன்று உள்ளது. இடைவேளை நேரத்தில் அங்கு கிடைக்கும் பாப்கான், ஸ்னாக்ஸ், கூல்டிரிங்க் போன்றவற்றை ரசிகர்கள் வாங்கி சுவைக்கிறார்கள். இது திரையரங்கிற்கு ஒரு பெரிய வருமான ஆதாரமாக இருக்கிறது. இதுவும் இன்டர்வல் விடுவதற்கு ஒரு காரணமாக உள்ளது.audience increased in saudi cinema theatres