Rajinikanth Says About RM Veerappan : தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவராக வலம் வந்தவர் ஆர்.எம்.வீரப்பன். இவர் எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து நான் ஆணையிட்டால், காவல்காரன், ரிக்ஷாக்காரன், இதயக்கனி என எம்.ஜி.ஆர் நடித்த பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை தயாரித்த அவர், பின்னர் ரஜினிகாந்தை ஹீரோவாக வைத்து மூன்று முகம், தங்கமகன், ஊர்க்காவலன், பணக்காரன், பாட்ஷா என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்தார்.
ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாள்
தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் கடந்த ஆண்டு ஏப்ரல் 9ந் தேதி காலமானார். அவர் மறைந்து ஓராண்டு ஆகும் நிலையில், அவரது நினைவு நாளான இன்று அவரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசி இருக்கிறார். அதில் ரஜினிகாந்த் கூறியதாவது : என் மீது அன்பு காட்டியவர்கள் 3, 4 பேர். அவர்களில் பாலச்சந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரும் அடங்குவர். இவர்களெல்லாம் தற்போது நம்மிடம் இல்லை என நினைக்கும் போது கஷ்டமா இருக்கும். அவர்களை ரொம்ப மிஸ் பண்றேன்.