Published : Apr 09, 2025, 11:31 AM ISTUpdated : Apr 09, 2025, 11:32 AM IST
Good Bad Ugly: அஜித் நடிப்பில், உலகம் முழுவதும் நாளை ரிலீஸ் ஆக உள்ள 'குட் பேட் அக்லீ' படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சி திரையிட படுமா? இல்லையா என்பது பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன 'விடாமுயற்சி' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், அடுத்ததாக அஜித்தின் 'குட் பேட் அக்லீ' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.
25
Director Adhik Ravichandran Interview
ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி:
அஜித் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் கவனம் செலுத்தி வருவதால், படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபடுவார்கள் என சில தகவல் வெளியான போதிலும், இதுவரை புரமோஷன் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மட்டுமே, சில யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் இவர் கூறும் விஷயங்கள் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக, 'விடாமுயற்சி' படத்தின் சமயத்தில் அஜித்தை சந்தித்து 'குட் பேட் அக்லீ' படத்தின் கதையை கூறியதாகவும், இந்த படத்தில் த்ரிஷாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அஜித் சாரிடம் கூறி இருந்தேன், பின்னர் த்ரிஷா மேம்மை சந்தித்து நான் சம்மதம் பெறுவதற்கு முன்பே... அஜித்தே த்ரிஷாவுக்கு படத்தின் கதையை கூறி அவரிடம் சம்மதம் பெற்றதாக இவர் கூறிய தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
45
Good Bad Ugly Pre Booking Collection:
'குட் பேட் அக்லீ' படத்தின் முன்பதிவு:
முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாட கூடிய ஒரு படமாக 'குட் பேட் அக்லீ' Good Bad Ugly எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் முன்பதிவு பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் 'குட் பேட் அக்லீ' படத்தின் முன்பதிவு வசூல் மட்டும் ரூ.20 கோடி மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை நாள் வருவதால், ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 'குட் பேட் அக்லீ' ரூ.100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'குட் பேட் அக்லீ' படத்தின் சிறப்பு காட்சி போடப்படுமா?
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு, தமிழக அரசின் அனுமதியோடு காலை 9 மணிக்கு ஸ்பெஷல் ஷோ போடப்படுவது வழக்கம். ஆனால் இதுவரை 'குட் பேட் அக்லீ' படத்தின் சிறப்பு காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பலரும் 'குட் பேட் அக்லீ' படத்தின் சிறப்பு காட்சி போடப்படுமா? என கேள்விகளை முன்வைத்து வந்தனர். இதற்க்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் "ஏப்ரல் 10-ஆம் தேதி, காலை 9 மணிக்கு தமிழகத்தில் சிறப்பு காட்சி போடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது" Good news from Adhik - fans celebrate.