Ajithkumar April Release Movies : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இதுவரை அவர் நடிப்பில் 62 படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது அஜித்தின் 63வது படமாக குட் பேட் அக்லி உருவாகி உள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படம் ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரியா வாரியர், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இதற்கு முன் அஜித் நடித்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன படங்கள் பற்றி பார்க்கலாம்.
26
Ajithkumar
என் வீடு என் கணவர்
நடிகர் அஜித் நடித்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன முதல் படம் ‘என் வீடு என் கணவர்’. இப்படம் கடந்த 1990ம் ஆண்டு ஏப்ரல் 13ந் தேதி திரைக்கு வந்தது. நடிகர் அஜித் நடிகராக அறிமுகமான படமும் இதுதான். இப்படத்தில் சுரேஷ் மற்றும் நதியா ஹீரோ, ஹீரோயினாக நடித்திருப்பார்கள். இப்படத்தில் அஜித் குணச்சித்திர வேடத்தில் தான் நடித்திருப்பார். இப்படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.
36
Ajith Movie Results
ராசி
அஜித் ஹீரோவாக நடித்து ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன முதல் படம் ராசி. இப்படம் கடந்த 1997-ம் ஆண்டு ஏப்ரல் 18ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக ரம்பா நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், வடிவேலு, நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முரளி அப்பாஸ் இயக்கி இருந்த இப்படம் பிளாப் ஆனது.
அஜித் நடிப்பில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த படம் என்றால் அது வாலி மட்டும் தான். இப்படம் கடந்த 1999-ம் ஆண்டு ஏப்ரல் 30ந் தேதி திரைக்கு வந்தது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன், ஜோதிகா நடித்திருந்த இப்படம் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
56
Ajithkumar April Release Movies
திருப்பதி
அஜித்தின் மற்றுமொரு ஏப்ரல் மாத ரிலீஸ் படம் திருப்பதி. விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த பேரரசு தான் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். இப்படமும் தோல்வியை தழுவியது.
66
Good Bad Ugly
வரலாற்றை மாற்றுமா குட் பேட் அக்லி?
அஜித் நடிப்பில் இதுவரை 4 படங்கள் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அதில் 3 படங்கள் பிளாப் ஆகி உள்ளன. 2006-ம் ஆண்டுக்கு பின் அஜித் நடிப்பில் இதுவரை ஏப்ரல் மாதம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. சுமார் 19 ஆண்டுகளுக்கு பின் குட் பேட் அக்லி படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகிறது. அந்த டிரெண்டை குட் பேட் அக்லி மாற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.