VFX-க்கே 250 கோடி! அட்லீயிடம் அள்ளிக் கொடுத்த சன் பிக்சர்ஸ்; பட்ஜெட்டே இத்தனை கோடியா?

Published : Apr 09, 2025, 07:53 AM IST

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து வரும் படத்திற்குன் சன் பிக்சர்ஸ் வாரி வழங்கிய பட்ஜெட் மற்றும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
VFX-க்கே 250 கோடி! அட்லீயிடம் அள்ளிக் கொடுத்த சன் பிக்சர்ஸ்; பட்ஜெட்டே இத்தனை கோடியா?

Atlee and Allu Arjun Movie Budget : பாகுபலியின் மூலம் தெலுங்கு சினிமா பான் இந்தியா அளவில் பிரபலம் ஆனது. பின்னர் வந்த புஷ்பா ஃபிரான்சைஸ் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. இந்த காரணங்களால், தெலுங்கில் இருந்து வரவிருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் பான் இந்திய பார்வையாளர்களை மனதில் வைத்து எடுக்கப்படுகின்றன. ராஜமௌலி போன்ற இயக்குனர்கள் உலகளாவிய பார்வையாளர்களையும் மனதில் கொண்டு படத்தை எடுக்க தொடங்கி உள்ளனர். 

24
Allu Arjun Next Movie with Atlee

அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் பட்ஜெட்

தற்போது தென்னிந்தியாவில் இருந்து உலகளவில் கவனத்தை ஈர்க்கும் ஒரு பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம்தான் அது. இந்த படம் பட்ஜெட் மற்றும் சம்பளம் ஆகியவற்றில் வியக்க வைக்கிறது. ஜவான் உட்பட பெரிய வெற்றிப் படங்களை உருவாக்கிய அட்லீயும் புஷ்பா நாயகனும் இணையும் இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய் என்று பிங்க்வில்லா தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்... அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

34
Allu Arjun and Atlee salary

சம்பளம் எவ்வளவு?

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் (விஎஃப்எக்ஸ்)-க்கு மட்டும் 250 கோடியை சன் பிக்சர்ஸ் செலவிடுகிறது. தனது கெரியரில் அட்லீ இயக்கும் 6வது படம் இது. இந்த படத்துக்காக அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு சுமார் 175 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதுதவிர படத்தின் லாபத்தில் இருந்து 15 சதவீதம் ஷேரும் அல்லு அர்ஜுனுக்கு கிடைக்கும்.

44
AA22 x A6 Movie

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் அட்லீ படம்

அட்லீ இந்தப் படத்தை உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டுடியோக்களில் இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் (விஎஃப்எக்ஸ்) பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில், பட்ஜெட்டைப் பார்க்கும்போது, ராஜமௌலியின் புதிய படத்தை விட ஏஏ 22 x ஏ6 (அல்லு அர்ஜுனின் 22-வது படம் மற்றும் அட்லியின் ஆறாவது படம்) படத்தின் பட்ஜெட் குறைவு. மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி இயக்கும் படத்தின் பட்ஜெட் 1000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...கங்குவா ரேஞ்சுக்கு பில்டப் உடன் வெளிவந்த அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories