சர்ச்சைகளை கடந்து வசூல் வேட்டையாடும் மோகன்லாலின் எம்பூரான் – உலகளவில் ரூ.250 கோடி வசூல் குவித்து சாதனை!

Mohanlal L2 Empuraan Box Office Collection : மோகன்லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் எம்புரான் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்து வருவதாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

Mohanlal L2 Empuraan Box Office Collection in Worldwide Details in Tamil rsk
Mohanlal L2 Empuraan Box Office Collection

Mohanlal L2 Empuraan Box Office Collection : பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியான படம் தான் L2: எம்புரான். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அரசியல் கதைகளை மையப்படுத்திய இந்தப் படம் உலகளவில் வசூல் வேட்டையாடி வருகிறது.

Mohanlal L2 Empuraan Box Office Collection in Worldwide Details in Tamil rsk
Mohanlal L2 Empuraan Box Office Collection

இந்த படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளால் எம்புரான் படம் சர்ச்சையில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் மீண்டும் வெளியிடப்பட்டது. என்னதான் படம் சர்ச்சையில் சிக்கினாலும் கூட படத்தின் வசூல் வேட்டையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


Mohanlal L2 Empuraan Box Office Collection

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எம்புரான் வசூல் சாதனை படைத்து வருகிறது. அதன்படி ஐக்கிய அரபு எமிரேட் பாக்ஸ் ஆபிஸில் 9.36 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்று விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

Empuraans collection

உலகளவில் L2: எம்பூரான் ரூ.2.5 பில்லியனுக்கும் (ரூ.250 கோடிக்கும் அதிகம்) அதிகமாக வசூலித்துள்ளது. அதுமட்டுமின்றி மலையாள சினிமாவில் அதிக வசூல் குவித்த படம் என்ற மகத்தான சாதனியை இந்தப் படம் படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.1 பில்லியனை (ரூ.100 கோடி) வசூலித்துள்ளது, அதே நேரத்தில் வட அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் படம் வெளியாகி சில நாட்களுக்குள்ளாக அமெரிக்க டாலர் மதிப்பில் 1.27 மில்லியனைத் தாண்டியுள்ளது.

Latest Videos

vuukle one pixel image
click me!