சமந்தா நடிக்க மறுத்து ஹிட்டான டாப் படங்கள் என்னென்ன?
Samantha Rejected Top Hit Movies : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடிக்க மறுத்து ஹிட் கொடுத்த டாப் படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Samantha Rejected Top Hit Movies : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடிக்க மறுத்து ஹிட் கொடுத்த டாப் படங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Samantha Rejected Top Hit Movies : சமந்தா எந்தளவிற்கு சினிமாவில் உயர்ந்தாரோ அதே அளவிற்கு சினிமாவில் பல வாய்ப்புகளையும் தவறவிட்டுள்ளார். விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், சூர்யா ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா, பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்க மகன், பெங்களூரு நாட்கள், தெறி, 24, மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு பிறகு மா இண்டி காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். வெப் சீரிஸிலும் ஆர்வம் காட்டி அதிலும் நடித்து வந்தார். சமந்தா சினிமாவில் எவ்வளவு உயர்ந்தாரோ அதே அளவிற்கு பட வாய்ப்புகளையும் மறுத்துள்ளார். அவர் மறுத்து ஹிட் கொடுத்த டாப் படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சமந்தா தவறவிட்ட படங்களில் சமீபத்திய பிளாக்பஸ்டர் இண்டஸ்ட்ரி ஹிட் புஷ்பாவும் ஒன்று. சமந்தா மிஸ் செய்ததால் அந்த அதிர்ஷ்டம் ராஷ்மிகாவைப் பிடித்தது. விஷயம் என்னவென்றால், ரங்கஸ்தலம் படத்தில் சமந்தாவின் நடிப்பைப் பார்த்து மயங்கிப்போன சுகுமார் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் சமந்தாவை எடுக்க நினைத்தாராம். ஆனால் அப்போது சமந்தா விவாகரத்து பெற்றது. அவர் மீண்டு வர நிறைய நேரம் பிடித்தது. அந்த நேரத்தில் அவர் மிகுந்த வேதனையில் இருந்ததால் இந்த பிராஜெக்டை செய்ய முடியவில்லையாம்.
இதற்கு முன்பு திருமண வேலைகள் காரணமாக ஒரு ஹிட் படத்தை மிஸ் செய்தாராம் சமந்தா. நேச்சுரல் ஸ்டார் நானியுடன் ஏற்கனவே ஈகா, ஏதோ வெள்ளிபோயிந்தி மனசு படங்களில் நடித்திருந்தார் சமந்தா. அதன் பிறகு மூன்றாவது முறையாகவும் நடிக்கும் வாய்ப்பு வந்தது. நின்னு கோரியில் சமந்தாவை எடுக்க இயக்குனர் நினைத்தாராம். ஆனால் இந்த சினிமா நேரத்தில் சைத்துவுடன் திருமண வேலைகளில் பிஸியாக இருந்த ஸ்டார் ஹீரோயின். அந்த படத்திற்கு நோ சொல்லிவிட்டார் சமந்தா. ஆனால் இந்த படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது.
இதே போன்று தமிழில் ஒரு பெரிய படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். அந்தப் படம் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ஐ. முதலில் இந்தப் படத்தில் சமந்தாவை நடிக்க வைக்க அவரிடம் கேட்டார்களாம். அவரும் ஓகே சொல்லி படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்தப் படத்திலிருந்து சமந்தா விலகியிருக்கிறார். அதன் பிறகு தான் சமந்தாவிற்கு பதிலாக இந்தப் படத்தில் எமி ஜாக்சனை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
ராம் சரண், அல்லு அர்ஜூன் கூட்டணியில் வந்த எவடு படத்தில் கூட சமந்தாதான் ஹீரோயினாக நடிக்க வேண்டியதாம். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக சமந்தா இந்த படத்தை நிராகரித்தாராம். ராம் சரணுடன் இன்னொரு படத்தையும் சமந்தா மிஸ் செய்தார். அந்த படம் வேறு எதுவும் இல்லை புரூஸ் லீ. இந்த படத்தில் முதலில் சமந்தாவை எடுத்தாலும். அவர் அந்த நேரத்தில் வேறு படங்களில் கமிட் ஆகி, அவற்றை முடிப்பதற்காக இந்த படத்தை விட்டுக்கொடுத்ததாக தெரிகிறது. சமந்தாவிற்கு பதிலாக ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஆனால் எவடு, புரூஸ்லீ இரண்டு படங்களும் பெரிதாக ஓடவில்லை.
சமந்தா பாலிவுட்டிலும் சில படங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது அங்கு தொடர்ச்சியாக படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். ஆனால் ஒரு காலத்தில் பாலிவுட்டில் இருந்து வந்த வாய்ப்புகளை தென்னிந்திய படங்களுக்காக விட்டுக்கொடுத்தாராம் ஸ்யாம். வடக்கில் சூப்பர் ஹிட் மூவி ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் இந்த மூவிக்காகவும் முதலில் சமந்தாவை எடுக்க பார்த்தார்கள் ஆனால் இதற்கு சமந்தா ஆர்வம் காட்டவில்லையாம். இப்படி சமந்தா இன்னும் சில படங்களையும் மிஸ் செய்ததாக தகவல்.