Ramarajan, Nalini Reunion for Kids: What is the truth? சினிமாவில் துணை இயக்குனராக இருந்து, பின்னர் கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி நடிகரானவர் தான் ராமராஜன். 'மீனாட்சி குங்குமம்' படம் மூலமாக அறிமுகமான ராமராஜன் 'நம்ம ஊரு நல்ல ஊரு' படம் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு பின்னர் எங்க ஊரு பாட்டுக்காரன், நேரம் நல்லா இருக்கு, என்னை விட்டு போகாதே, எங்க ஊரு காவல்காரன், செண்பகமே செண்பகமே, வில்லு பாட்டுக்காரன், கரக்காட்டக்காரன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் கிராமத்து கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.