அஜித் - விஜய்யை விடுங்க; புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்க ஆசைப்படும் 3-ஆவது ஹீரோ யார் தெரியுமா?

'புஷ்பா' படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகிவிட்ட இயக்குனர் சுகுமார், அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தான் இயக்க ஆசைப்படும் 3 தமிழ் ஹீரோக்கள் பற்றி கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
 

Pushpa Director Sukumar wants to direct ajith vijay and karthi are 3 Tamil actors mma

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் இயக்குனர் சுகுமார். 2004-ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஆர்யா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன் பின்னர் ராம் பொத்தினேனியை  ஹீரோவாக வைத்து ஜகண்டம் படத்தை இயக்குனர். அதன் பின்னர் ஆர்யா 2, 100 % லவ், உள்ளிட்ட 10 படங்களை மட்டுமே இதுவரை இயக்கி உள்ளார். பெரும்பாலும் முன்னணி இளம் தெலுங்கு ஹீரோக்கள் அனைவருடனும் பணியாற்றி விட்டார்.
 

Pushpa Director Sukumar wants to direct ajith vijay and karthi are 3 Tamil actors mma

பன்முக திறமையாளர்:

இயக்குனர் என்பதை தாண்டி சில படங்களில் கதாசிரியராக பணியாற்றியுள்ள இவர், தயாரிப்பாளராகவும் உள்ளார். இயக்குனர் சுகுமாரை பான் இந்தியா அளவுக்கு மிகவும் பிரபல படுத்தியது அல்லு அர்ஜுனை வைத்து இவர் இயக்கிய 'புஷ்பா' திரைப்படம் தான். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் 2021-ஆம் ஆண்டு வெளியாகி சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதே போல் இப்படத்தில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய  விருதும் கிடைத்தது.

அல்லு அர்ஜூன் பெயரால் அடிக்கடி சர்ச்சை; ஜோதிடத்தின் படி பெயரை மாற்றுகிறாரா அல்லு அர்ஜூன்?


ரூ.1800 கோடி வசூல்:

இதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நிலையில், முதல் நாளே ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் படம் சிக்கினாலும் வசூலில் ரூ.1800 கோடி வசூல் செய்தது. கூடிய விரைவில் 3-ஆவது பாகத்தையும் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளதால், புஷ்பா 3 திரைப்படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது என கூறப்படுகிறது. மேலும் புஷ்பா படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா நடிக்க, அனசுயா, சுனில், பகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தளபதி விஜய் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை:

இந்நிலயில், சமீபத்தில் சென்னையில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட, 'புஷ்பா 2' பட இயக்குனர் சுகுமாரிடம்,  தமிழில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் யாரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது... இதற்கு பதில் அளித்த இயக்குனர் சுகுமார்," தளபதி விஜய் வைத்து படம் இயக்க ஆசை.  அவரை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் இயக்கும் ஆசை உள்ளது. என கூறிவிட்டு 3-ஆவது நபராக நடிகர் கார்த்தியின் பெயரை கூறினார். 

புஷ்பா 2 கலெக்‌ஷன்ஸ் குறித்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

கார்த்தியை வைத்து படம் இயக்க ஆசைப்படும் சுகுமார்:

நடிகர் கார்த்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் அழகாக தன்னுடைய எக்ஸ்பெஷனை வெளிப்படுத்துவார். எனவே அவரை வைத்து படம் இயக்க ஆசை என கூறியுள்ளார். இதை சுகுமார் தெலுங்கில் கூறிய நிலையில், எஸ் ஜே சூர்யா அதை அப்படியே தமிழில் கூறினார். விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளதால், அவரை வைத்து சுகுமார் படம் இயக்க வாய்ப்பே இல்லை என்றாலும், அஜித்  அல்லது கார்த்தியை வைத்து கூடிய விரைவில் படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!